அரசு மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது? நோயாளிகள் அவதி | Heart surgery |Patients waiting | GH |TN
சென்னையில் ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, கோவை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. அதோடு ஓமந்துாரார் மற்றும் கிண்டி பல்நோக்கு மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சை கிடைக்கிறது. அதாவது, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையுடன், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற இதயம் தொடர்பான உயிர்காக்கும் சிகிச்சைகளும் தரப்படுகின்றன. இந்த சிகிச்சைகளை, முதல்வர் காப்பீடு அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக பெற முடியும். உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கொரோனாவுக்கு பின் மக்களிடம் இதய பாதிப்பு அதிகரித்து வருகிறது. இளம் வயது முதல் முதியவர்கள் வரை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன. இதய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளித்தாலும், நிரந்தர தீர்வுக்கான அறுவை சிகிச்சை செய்வதில் தொடர்ந்து காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைநகர் சென்னையின் பிரதான மருத்துவமனைகளான ராஜிவ்காந்தி, ஓமந்துாரார் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மட்டும் தலா 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மாநிலம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இப்படி காத்திருந்தும் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை கிடைக்காமல், இதய நோயாளிகள் ஆங்காங்கே இறக்கும் அபாயமும் அரங்கேறுகிறது. இதுகுறித்து, அரசு மருத்துவமனை இதய நிபுணர்கள் கூறுகையில்,