/ தினமலர் டிவி
/ பொது
/ 2 மணி நேர மழையால் ஸ்தம்பித்த கோவை நகரம் | Heavy rain | Coimbatore | Flood | Water logging
2 மணி நேர மழையால் ஸ்தம்பித்த கோவை நகரம் | Heavy rain | Coimbatore | Flood | Water logging
வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இப்போது வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது. கடந்த 2 நாட்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கோவை மாநகர், புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் நேற்று மிதமானது முதல் கன மழை பெய்தது. இன்று மீண்டும் மதியம் 3.30 மணி அளவில் தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. பலத்த இடியுடன் பெய்த கன மழை கோவை மாநகர், புறநகர் பகுதிகளையே புரட்டி போட்டுவிட்டது.
அக் 13, 2024