/ தினமலர் டிவி
/ பொது
/ காஷ்மீர், ஹிமாச்சல், உத்தராகண்டில் நிலைமை மோசம் | Heavy Rain | Jammu Kashmir | Cloud burst in Doda
காஷ்மீர், ஹிமாச்சல், உத்தராகண்டில் நிலைமை மோசம் | Heavy Rain | Jammu Kashmir | Cloud burst in Doda
காஷ்மீரை புரட்டிப்போடும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் மரணம் 2 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவாரில் சமீபத்தில் நிகழ்ந்த மேகவெடிப்பு, பெருவெள்ளத்தில் 60 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயினர். காயமடைந்த நுாற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிஷ்துவார் துயர சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில், தோடாவில் ஏற்பட்ட மேகவெடிப்பால், சுற்றுவட்டார பகுதி முழுதும் காட்டாற்று வெள்ளத்தில் நாசமானது. இந்த வெள்ளத்தில், 4 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
ஆக 26, 2025