இயல்பு நிலைக்கு திரும்பாத தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை |Heavy rain | Public Affect
தமிழகத்தை புரட்டி எடுக்கும் மழை பாதிப்பு அல்லல்படும் மக்கள் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 552 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. திருச்சி மாவட்டம் அருவாக்குடி, கள்ளு குடி, சோமரசம்பேட்டை, அல்லித்துறை பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யாரும் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டூரிஸ்ட்கள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் அருகே உள்ள செங்குளம் கண்மாய் நிரம்பி கலெக்டர் ஆபீசுக்குள் நீர் புகுந்தது. 2வது நாளாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதேபோன்று அரசு மருத்துவமனைக்கு உள்ளேயும் மழைநீர் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் பிஎன்டி காலனி, கதிர்வேல் நகர், ராஜிவ் நகர் போன்ற பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.