மிரட்டும் குற்றால அருவிகள்: ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் Heavy rain Courtallam fall| floods
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழை கொட்டியது. அதன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் இன்று மாலையில் இருந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல, தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுவதைப் பாரத்த போலீசார், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி எல்லா அருவிகளிலும் குளிக்க தடை விதித்தனர்.