உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? | Heavy Rain | IMD | Rain Alert | Weather

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? | Heavy Rain | IMD | Rain Alert | Weather

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் 11 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 8 ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் என 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 9ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை என 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டு உள்ளது.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ