உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Thiruvannamalai | Girivalam | Highcourt

தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Thiruvannamalai | Girivalam | Highcourt

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து எந்த அனுமதியும் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு கழிப்பறைகளும், செப்டிங் டேங்குகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத செயல்களுக்கு வனத்துறை அதிகாரிகளும், நகராட்சி மற்றும் மின்துறை அதிகாரிகளுமே பொறுப்பு.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி