/ தினமலர் டிவி
/ பொது
/ ஹிமாச்சலுக்கு பறந்த மோடி: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு Himachal Flood | Modi Visit to Himachal
ஹிமாச்சலுக்கு பறந்த மோடி: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு Himachal Flood | Modi Visit to Himachal
நாட்டின் வட மாநிலங்கள் கனமழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த மேகவெடிப்பால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பல வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மண்ணில் புதைந்தன. முக்கிய நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில், கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
செப் 09, 2025