உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி சம்பவத்தில் பகீர் பின்னணி | hindu munnani tirupur balamurugan case

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி சம்பவத்தில் பகீர் பின்னணி | hindu munnani tirupur balamurugan case

இந்து முன்னணி நிர்வாகி சம்பவத்தில் பகீர் ‛சம்பவம் முடிஞ்சது என பறந்த மெசேஜ் பின்னணியில் யார் யார்? விசாரணையில் அதிர்ச்சி திருப்பூரில் நேற்று அதிகாலையில் நடந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 30; இந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 3:30 மணி இருக்கும். தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனை, நண்பர் ஒருவர் மொபைல் போனில் அழைத்தார். உடனே வீட்டில் இருந்து நடந்து வந்தபோது, அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி