இந்து அமைப்புகள் போராட்டம் அறிவிப்பால் திடீர் தடை
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. தர்காவில் ஆடு, கோழி வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்போவதாக வந்த சிலரால் பிரச்னை உண்டானது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது அசைவம் சமைக்க கூடாது என இந்துக்கள் எதிர்க்கின்றனர். இச்சூழலில், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் மலை மீது அசைவ உணவை கொண்டு சென்று சாப்பிட்டதாக கூறப்பட்டதால் இந்த விவகாரம் தீவிரமானது. திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் கூடாது என்றும், மலையின் புனிதத்தை காக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளன. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.