உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதறவைக்கும் ஹாங்காங் தீ விபத்து-பகீர் காட்சி hong kong fire video | tai po tragedy | wang fuk court

பதறவைக்கும் ஹாங்காங் தீ விபத்து-பகீர் காட்சி hong kong fire video | tai po tragedy | wang fuk court

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங்கின் தை போ மாகாணத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தலா 32 மாடிகள் கொண்ட 8 கட்டடங்கள் உள்ளன. மொத்தம் 2,000 வீடுகள். இதில் 4,800 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கும் பணிகளுக்காக மூங்கில் சாரங்கள் மற்றும் வலைகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு கட்டடத்தில் இருந்த மூங்கில் சாரத்தில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த கட்டடங்களுக்கும் தீ மளமளவென பரவியது. மொத்தமுள்ள 8 கட்டடங்களில் 87 கட்டடங்களுக்கு தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மொத்த அப்பார்ட்மென்ட்டும் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது. அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. #HongKongFireVideo #TaiPoTragedy #WangFukCourt #TaiPoFire #HongKongNews #EmergencyResponse #FireIncident #TragicEvents #CommunitySupport #HongKongFire #VoicesfromTaiPo #UrbanSafety #FirstResponders #LocalNewsHK #DisasterAwareness #FireSafety #EmergencyPreparedness #BreakingNews #TaiPoCommunity

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி