உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருடனுக்கு முன்னாள் கடற்படை வீரர் கோரிக்கை House theft | Ex Navyman | Wayanad

திருடனுக்கு முன்னாள் கடற்படை வீரர் கோரிக்கை House theft | Ex Navyman | Wayanad

கேரளா, வயநாட்டை சேர்ந்தவர் முன்னாள் கப்பல்படை வீரர் அமல் ஜான். அங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கு 3 நாள் முன்புதான், குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த பயங்கரத்தை டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மீட்பு பணிகள் முடிந்து நிலைமை ஓரளவு சீரான பிறகுதான் வயநாடு வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அதிர்ச்சி காத்திருந்தது. வீடு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு நகைகள், ரேடோ வாட்ச் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயிருந்தன.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை