பெண் உயிரை காப்பாற்ற ரிஸ்க் எடுத்த 2 கான்ஸ்டபிள்கள் Hyderabad young woman rescued by 2 constables ra
நம்ம ஊர் போலீசை குறை சொல்லி பேசியே பழக்கப்பட்டு போனதால் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்கள் அடிபட்டு போகின்றன. அப்படி ஒரு நல்ல சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள பாலாபூரில் திருமணமான இளம்பெண் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, அவசர போலீஸ் எண் 100 க்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து பாலாபூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் பறந்தது. பணியில் இருந்த கான்ஸ்டபிள்கள் ராஜு மற்றும் தருண் இளம்பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். கதவை இளம்பெண் உள்புறமாக பூட்டியிருந்தார். யோகிக்கவே இல்லை. அருகில் கிடந்த பெரிய கட்டையை கொண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். ஃபேனில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பெண் தொங்கும் தருணத்தில் உள்ளே சென்ற போலீசார், துப்பட்டாவை துண்டித்து பெண்ணை காப்பாற்றினர். கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையில் இந்த முடிவை எடுத்துள்ளார். இருவரையும் உட்கார வைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றனர். ஒருசில நொடிகள் தாமதித்திருந்தாலும்கூட அந்தப் பெண்ணை உயிரோடு பார்த்திருக்க முடியாது என கூறி, போலீசாரை அக்கம் பக்கத்து பெண்கள் பாராட்டினர். போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு பாராட்டி பரிசு வழங்கினார்.