உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பனிச்சகரத்தில் நடந்த விமான விபத்து பின்னணி | Army |1968 IAF Plane Crash In Himachal |

பனிச்சகரத்தில் நடந்த விமான விபத்து பின்னணி | Army |1968 IAF Plane Crash In Himachal |

56 ஆண்டுக்கு பின் கிடைத்த ராணுவ வீரர்களின் உடல்கள்! இந்திய விமான படைக்கு சொந்தமான AN 12 என்ற போக்குவரத்து விமானம், 102 ராணுவ வீரர்களுடன், 1968 பிப்ரவரி 7ல் சண்டிகரில் இருந்து லே நோக்கி புறப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தின் ரோஹ்தங் பாஸ் என்ற பனிச்சிகரத்தின் மேல் பறந்தபோது, கீழே விழந்து நொறுங்கியது. பனிப்பிரதேசம் என்பதால் விமானத்தின் நொறுங்கிய பாகங்களையும், இறந்தவர்களின் உடல்களையும் பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற நிறுவனத்தை சேர்ந்த வீரர்கள், விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களை 2003ல் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட், அப்பகுதியில் 2005, 2006, 2013 மற்றும் 2019களில் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது வரை, ஐந்து பேரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இந்நிலையில், டோக்ரா ஸ்கவுட், திரங்கா மலை மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் மீண்டும் இறங்கினர். தற்போது, விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், மூன்று உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்களில் இருவர், சிப்பாய்சிங் மற்றும் மல்கான் சிங். ராணுவத்தின் மருத்துவ படையில் பணியாற்றியவர்கள். மற்றொருவர் கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தாமஸ் செரியன். இளம் வயதில் ராணுவத்தில் சேர்ந்த இவர், 22 வயதில் விமான விபத்தில் இறந்தார்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை