இளையான்குடியில் தடுத்து நிறுத்திய போலீஸ்: கொந்தளித்த ராஜா Ilayangudi bjp H.raja police not allowed
பரமக்குடி பாஜ கவுன்சிலர் முருகன் 2013ல் வெட்டிக் கொலை செயயப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா காரைக்குடியில் இருந்து கிளம்பினார். அவருடன் பாஜ நிர்வாகிகள் ராஜ பிரதீப், சிலம்பரசன் உள்ளிட்டோரும் கிளம்பினர். இளையான்குடி பைபாஸ் ரோடு வழியாக பரமக்குடி செல்ல முடிவு செய்தார். இளையான்குடி காளையார் கோவில் ரோட்டில் போலீசார் பேரிகார்டுகளை வைத்து ராஜா மற்றும் பாஜவினரின் கார்களை தடுத்து நிறுத்தினர். இளையான்குடிக்குள் செல்லக்கூடாது பைபாஸ் வழியாக செல்லுங்கள் என போலீசார் கூறினர். இதனால் ஆவேசமான எச் ராஜா, போலீஸ் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இளையான்குடிக்கு வந்தாலே என்னை தடுக்கிறீர்கள் ஏன்? இளையான்குடி என்ன பாகிஸ்தான்லயா இருக்கு, ஏன் நான் இந்த வீதியில் செல்லக்கூடாது; நான் இந்து என்பதாலா? என அடுக்கடுக்கான கேள்விகளை போலீஸ் அதிகாரியிடம் ராஜா கேட்டார். திமுக ஆட்சியையும், போலீஸ் அராஜகத்தையும் வெளுத்து வாங்கினார். இளையான்குடிக்குள் விடாவிட்டால் தர்ணா போராட்டம் நடத்துவேன் என ராஜா திட்டவட்டமாக சொன்னபிறகே, அவரை போலீசார் அனுமதித்தனர்.