உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்க மொழி பேசுவோர் கைது விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு Illegal Immigrants Case| West Bengal |

வங்க மொழி பேசுவோர் கைது விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மறுப்பு Illegal Immigrants Case| West Bengal |

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோதமாக குடியேறி, நம் நாட்டினர் போன்ற போர்வையில் தங்கி வேலை செய்யும் வங்கதேசத்தினரை நாடு கடத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் டில்லி, பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் வங்க தேசத்தினரை அடையாளம் காணும் பணியில் மத்திய, மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். டில்லி, பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு சட்டப்படி நாடு கடத்தப்பட்டனர். ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் வங்க மொழிபேசுவோர், இந்தியர்களாக இருந்தாலும் பேசும் மொழியின் அடிப்படையில், அவர்கள் மீது வங்க தேசத்தினர் என்ற முத்திரை குத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. புலம் பெயர் மேற்கு வங்க தொழிலாளர் நல வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடினார். நாடு முழுதும் வங்க மொழி பேசுவோர் மீது தேவையற்ற கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் பேசும் மொழியின் காரணமாகவே அவர்களை வங்தேசத்தை சேர்ந்தவர்களாக கருத முடியாது. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டு, பின் அவர்கள் இந்தியர்கள் தான் என நிரூபணம் ஆனதும் மீண்டும் நம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விசாரணை என்ற பெயரில் வங்க மொழி பேசுவோர் மீது அராஜக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிரசாந்த் பூஷண் வாதாடினார். சட்ட விரோத குடியேறிகளை எப்படி கைது செய்யாமல் இருக்க முடியும். இந்த விவகாரத்தில் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பத்தால், அது வேறு வகை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என நீதிபதிகள் கூறினர். புலம்பெயர் தொழிலாளர்களின் நிரந்தர வசிப்பிடம் குறித்து விசாரிப்பதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. எனினும், மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட 9 மாநிலங்கள் இது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்ப கோர்ட் உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ