உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை கிரிக்கெட்டிலும் பழிதீர்த்த இந்தியா ind vs pak match | ind won pak asia cup | suryakumar

பாகிஸ்தானை கிரிக்கெட்டிலும் பழிதீர்த்த இந்தியா ind vs pak match | ind won pak asia cup | suryakumar

அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் 17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒபனிங் பேட்ஸ்மேன்கள் சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப் களம் இறங்கினர். சாஹிப்சாதா பர்ஹான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சல்மான் ஆகா 3 ரன், ஹசன் நவாஸ் 5 ரன்னில் நடையை கட்டினர். சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் டக் அவுட் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி, 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. ஒபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் 10 ரன்னில் அவுட் ஆனார். இன்னொரு புறம் அடித்து ஆடிய அபிஷேக் சர்மா 31 ரன், நிதானம் காட்டிய திலக் வர்மா 31 ரன் எடுத்தனர். 15.5 ஓவர்களில் இந்திய அணி இலக்கை கடந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் சூர்ய குமார் யாதவ் 47 ரன், சிவம் துபே 10 ரன்னில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

செப் 15, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 16, 2025 10:44

விளையாட்ட விளையாட்டா பார்க்கணும்னு மக்களுக்கு சொல்லி இந்திய வீரர்கள் கை குலுக்கலன்னா எப்படி சாமி. இங்கிருக்கிற ஆட்டக்காரர்கள்தான் அன்னைக்கு சாகடிச்சாங்களா. உள்ளூர் காவல்துறை, அரசதிகாரிகள் லஞ்சப்பணத்தை அதிகார பிச்சையெடுப்பதும் பயங்கரவாதிகளே. இவர்களை அறவே ஒழிக்க இயலுமா இந்தியர்களால்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ