முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல் | India - Pakistan conflict | Jaishankar
ஏப்ரல் 22ல் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மே 7 அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி தந்தது. அன்று முதல் தரை வழியாகவும், வான் வழியாகவும் இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 3 நாட்களாக நடந்த ஒவ்வொரு தாக்குதலையும் நமது ராணுவமும் எதிர்கொண்டு முறியடித்து வந்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இருதரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை திடீரென அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார்.