உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடும் சவால்களை சமாளித்து இந்தியாவின் நீடித்த வளர்ச்சி | India | global trade | UN | PM Modi

கடும் சவால்களை சமாளித்து இந்தியாவின் நீடித்த வளர்ச்சி | India | global trade | UN | PM Modi

பெரிய நாடுகளே தடுமாற்றம் கெத்து காட்டியது இந்தியா! பல்வேறு சவால்களுக்கு மத்தியில், வர்த்தக விரிவாக்கத்தில் இந்தியா சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாக ஐநாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. 2024ல் உலகளாவிய வர்த்தகம், 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி கண்டு, ஒட்டுமொத்தமாக 33 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. சேவைகள் துறை 9 சதவீதம், சரக்கு வர்த்தகம் 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. வளர்ந்த நாடுகள் வர்த்தக வளர்ச்சியில் தொய்வை கண்டு வரும் நிலையில், வளரும் நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை சராசரிக்கும் அதிகமான சிறப்பான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. நான்காவது காலாண்டில், அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும், இந்தியா மற்றும் சீனா வலுவான வர்த்தக வளர்ச்சி கண்டுள்ளன. சரக்கு வர்த்தகத்தை பொறுத்தவரை, ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. பெரிய பொருளாதார நாடுகளுள் ஒன்றான தென்கொரியா, ஏற்றுமதி வளர்ச்சி கடும் சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளர்ச்சி நேர்மறையாகவும், ஏற்றுமதி வளர்ச்சி எதிர்மறையாகவும் உள்ளது. இந்தியாவின் சரக்கு வர்த்தகம், நான்காவது காலாண்டு இறக்குமதி வளர்ச்சி 8 சதவீதமாகவும்; ஆண்டு இறக்குமதி வளர்ச்சி 6 சதவீதமாகவும் உள்ளது. காலாண்டு ஏற்றுமதி வளர்ச்சி 7 சதவீதமாகவும், ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சி 2 சதவீதமாகவும் உள்ளன. சேவைகள் துறை தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது என ஐநாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி