முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர்: பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏசி உள்ளிட்ட பல வசதிகளுடன் விரைவான, பயணத்தை வழங்குவதால் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், எல்லா வந்தே பாரத் ரயில்களிலும் உட்கார்ந்து செல்லும் வசதி கொண்ட இருக்கைகள்தான் உள்ளன. முதல் முறையாக ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மால்டாவில் நடந்த விழாவில் நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கிவைத்தார். #VandeBharat #SleeperTrain #IndiaRailways #PMModi #Guwahati #Howrah #IndianRailways #TrainJourney #TravelIndia #RailwayInnovation #VandeBharatExpress #TrainTravel #IndianTransport #RailwayNews #ModiGovernment #SustainableTravel #TrainLaunch