உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு அமெரிக்கா தரும் பயங்கர ஆயுதம் | India-US 15 MQ-9B Drone deal | Power of 15 MQ-9B drone

இந்தியாவுக்கு அமெரிக்கா தரும் பயங்கர ஆயுதம் | India-US 15 MQ-9B Drone deal | Power of 15 MQ-9B drone

அமெரிக்காவிடம் 15 MQ-9B என்ற சக்தி வாய்ந்த ட்ரோன் என்னும் ஆள் இல்லா விமானங்கள் உள்ளன. சண்டைக்கு பெரிதும் கை கொடுக்கும் இந்த வகை ட்ரோன்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. இதற்காக அமெரிக்காவுடன் சில ஆண்டுகளாக இந்தியா பேசி வந்தது. சமீபத்தில் நடந்த குவாட் மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். அப்போது 15 MQ-9B ட்ரோன் டீல் கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்தது. இப்போது அமெரிக்காவிடம் இருந்து 15 MQ-9B ட்ரோன்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் 31 ட்ரோன்களை இந்தியா வாங்குகிறது. இதன் மதிப்பு 32 ஆயிரம் கோடி ரூபாய். ட்ரோன்களை நிறுவும் வசதியை ஏற்படுத்துவது, ட்ரோன்களை தொடர்ந்து மெயின்டனன்ஸ் செய்து தரும் வசதிக்கும் சேர்த்து தான் இந்த தொகை. எப்படி பார்த்தாலும் 15 MQ-9B ட்ரோன் ஒன்றின் விலை மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய். ஒரு ஆள் இல்லா விமானம் விலை இவ்வளவு கோடி ரூபாயா என்று கேட்டால், அதில் இருக்கும் அம்சங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. 31 MQ-9B ட்ரோன்களை கில்லர் ட்ரோன், வேட்டை ட்ரோன் என்றும் அழைக்கிறார்கள். போர் சமயங்களில் இந்த வகை ட்ரோன்கள் இந்தியாவுக்கு பெரிதும் கை கொடுக்கும்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை