US-ஐ அலறவிடும் BRICS நாடுகள்: பின்னணி என்ன india us trade war |US vs Brics|US soybean trade issue
அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், வர்த்தக விவகாரத்தில் கறார் காட்டினார். பல நாடுகள் அமெரிக்காவுக்கு அநியாய வரி விதிப்பதாகவும், அந்த நாடுகள் தங்களுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்றும் எச்சரித்த டிரம்ப், இல்லை என்றால் பரஸ்பர வரி போடுவோம் என மிரட்டினார். பின்னர் ஒவ்வொரு நாட்டுக்கும் வரி விதிக்க ஆரம்பித்தார். சீனாவுக்கும் பரஸ்பர வரி போட்டார். பதிலுக்கு சீனாவும் வரி போட்டு தீட்டியது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி வரி போட்டதால், மிகப்பெரிய வர்த்தகப்போர் வெடித்தது. ஒரு கட்டத்தில் சீனாவுக்கு 145 சதவீதம் வரி போட்டது அமெரிக்கா. பதிலுக்கு 135 சதவீதம் வரி போட்டு மிரட்டியது சீனா. இரு நாடுகள் இடையே வர்த்தகம் ஸ்தம்பித்து போனது. ஸ்விட்சர்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையில் 2 நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன. அதன்படி, பதிலுக்கு பதில் இரு நாடுகளும் போட்ட வரி நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக பதற்றம் இன்னும் தணியவில்லை. இன்னொரு பக்கம் இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் 25 சதவீதம் பரஸ்பர வரி போட்ட டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் அபராத வரியும் விதித்து அடாவடி செய்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு அடாவடியால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்றால், இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா தான். நான்கு நாடுகளுமே பிரிக்ஸ் அமைப்பின் தூண்களாக இருக்கின்றன. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க பிரிக்ஸ் நாடுகள் ஓரணியில் திரள்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் சம்பவமாக சீனாவும் பிரேசிலும் சேர்ந்து அமெரிக்காவை அலறவிட்டு இருக்கின்றன. அடுத்த சம்பவத்துக்கு இந்தியா, சீனா, ரஷ்யா தயாராகி வருகின்றன. அப்படி என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.