பாகிஸ்தானை கதறவிட இந்தியா கையில் புது ஆயுதம் india vs pakistan | Integrated Weapon System | iron dom
நாடுகள் இடையேயான போரில் எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது எவ்வளவு முக்கியமோ, அதை விட எதிரிகள் வீசும் ஏவுகணை, ட்ரோன்களை இடைமறித்து அழிப்பதும் முக்கியம். இது தான் சொந்த நாட்டு மக்களை எதிரி தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவும். இதற்கு சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு கருவிகள் அவசியம். ஈரான் மற்றும் ஹமாஸ், ஹெஸ்புலா, ஹவுதிகளின் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் அட்டாக்கை இஸ்ரேல் சாதூரியமாக முறியடித்தது. இதற்கு அந்த நாட்டிடம் இருக்கும் அயன்டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ போன்ற வான் தடுப்பு கவசங்கள் முக்கிய பங்கு வகித்தன. பாகிஸ்தானை நாம் போரில் துவம்சம் செய்த போது, அவர்கள் நம் மீது நடத்திய தாக்குதலை எஸ்-400, ஆகாஷ் உள்ளிட்ட வான் பாதுகாப்பு கவசங்கள் மூலம் நம் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா நமக்கு தந்திருந்தது. இப்போது உள்நாட்டிலேயே சுதர்சன சக்ரா என்ற சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் வேலை நடக்கிறது. அடுத்த 10 ஆண்டில் இது தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த நிலையில் நம்மிடம் இருக்கும் பல வகை வான் பாதுகாப்பு கவசங்களை ஒருங்கிணைத்து, புதிய சிஸ்டம் ஒன்றை நம் ராணுவம் உருவாக்கியது. இதை முதல் முறையாக ஒடிசாவில் வைத்து டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சோதனை செய்தது. முதல் சோதனையே வெற்றி பெற்றது. இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பில் 3 வகையான முக்கிய ஆயுதங்கள் உள்ளன. ஒன்று எதிரிகளின் பீரங்கி அமைப்புகளை குறி வைத்து மின்னல் வேகத்தில் அடிக்கும்; இன்னொன்று ஷாட் ரேஞ்ச் ஏவுகணைகளை வீசும். எல்லைக்கு நெருக்கமாக வரும் எதிரிகளின் ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்து நொறுக்கும்; அடுத்தது உயர் சக்தி லேசர் சிஸ்டம். இது எதிரிகள் வீசும் ராக்கெட், ட்ரோன், ஏவுகணைகளை கதிர் வீச்சை பாய்ச்சி தகர்க்கும்; இந்த மூன்று அடுக்கு பாதுகாப்பு கருவிகளும் கச்சிதமாக தனது வேலையை செய்தன. பாகிஸ்தானுடன் இன்னொரு போர் வந்தால், அவர்களது தாக்குதலை மிக சுலபமாக எதிர்கொள்ள இந்த சிஸ்டம் கைகொடுக்கும். இதன் சோதனை வெற்றி பெற்ற நிலையில் டிஆர்டிஓவுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியது: ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய டிஆர்டிஓவுக்கும் இதற்காக பாடுபட்ட ராணுவத்துக்கும் பாராட்டுகள். இந்த தனித்துவமான சோதனை, நம் நாட்டுக்கு பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை உறுதி செய்து உள்ளது. எதிரியின் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான நம் பாதுகாப்பை இது வலுப்படுத்தப் போகிறது என்று கூறினார்.