உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லாமே ஹிட்! பாகிஸ்தானை ஒட ஒட அடிக்கும் இந்தியா india vs pakistan issue | putin india visit | modi

எல்லாமே ஹிட்! பாகிஸ்தானை ஒட ஒட அடிக்கும் இந்தியா india vs pakistan issue | putin india visit | modi

அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பதவி ஏற்ற பிறகு டிரம்ப் நடவடிக்கை மாறியது. அவரது அடாவடி காரணமாக இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் வரி சண்டை உருவானது. இரு நாடுகள் இடையேயான உறவிலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியாவோடு பகையை ஏற்படுத்திய அதே நேரத்தில் நம் பரம எதிரியான பாகிஸ்தானுடன் டிரம்ப் ஒட்டி உறவாட ஆரம்பித்தார். இது தான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த பாகிஸ்தான், தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது. கடந்த மாதம் சவுதி சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு ராணுவ ஒப்பந்தத்தை இறுதி செய்தார். அது இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக அமைந்தது. அதாவது, சவுதி மீதோ அல்லது பாகிஸ்தான் மீதோ ஏதாவது ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், அது இரண்டு நாடு மீதும் தாக்குதல் நடந்ததாக கருதப்படும். ஒரு நாட்டுக்காக இன்னொரு நாடு ராணுவ உதவி வழங்கும். இது தான் அந்த ஒப்பந்தம். உதாரணத்துக்கு, ஆப்ரேஷன் சிந்துார் போன்ற இன்னொரு நடவடிக்கையை நம் நாடு பாகிஸ்தான் மீது எடுத்தால், அது சவுதி மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்றாகிவிடும். இதனால் இந்தியா-சவுதி நல்லுறவு பாதிக்கப்படுமா; பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியாவுக்கு எதிராக சவுதி இறங்குமா என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக திருப்பி விடுவதற்கான முயற்சியாக இருக்கக்கூடுமா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்தது. இந்தியாவும், அந்த ஒப்பந்தம் குறித்து உன்னிப்பாக ஆய்வு செய்து வருவதாக சொல்லி இருந்தது. இந்தியாவுக்கு செக் வைக்கும் வகையில், பாகிஸ்தான் இப்படியொரு ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தாலும், எந்தவொரு வளைகுடா நாடும், நிச்சயம் இந்தியாவுக்கு எதிராக திரும்பாது என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். அந்த அளவுக்கு மோடியின் அரசு வெளியுறவு கொள்கையில் வலுவாக இருப்பதாக சொல்கின்றனர். அதே நேரத்தில் சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு எதிராக சீன வான் பாதுகாப்பு, சீன செயற்கைக்கோள் தரவுகள் ஆகியவற்றை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதிலும் பாகிஸ்தானுக்கு இந்தியா ட்விஸ்ட் வைத்தது. சமீபத்தில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடி, பழைய கசப்புணர்வுகளை மறந்து, வர்த்தக ரீதியாக ஒன்றிணைய சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் கைகுலுக்கினார். அதன் பிறகு பாகிஸ்தான் விவகாரத்தில் சீனாவும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியா. இந்த வர்த்தக வாய்ப்பை சீனா நிச்சயம் நழுவ விடாது என்பதே அரசியல் நிபுணர்களின் கணிப்பு. இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச் போடும் ரஷ்யாவின் என்ட்ரி. அதாவது, ரஷ்யாவுடன் பாகிஸ்தான் உறவு ஆழமாக இருந்தது இல்லை. ரஷ்யாவிடம் நிறைய ஆயுதம் வாங்குவோம் என்று இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஐஸ் வைத்திருக்கிறார். ஆனாலும் பாகிஸ்தான் பாச்சா பலிக்க வாய்ப்பே இல்லை. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு வரவிருப்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. புடின் வருகையால், இந்தியாவுக்கான பாதுகாப்பு வளையம் பன்மடங்கு அதிகரிக்குமே தவிர எள் முனை அளவும் குறையாது. ஏனெனில், இந்தியாவுடனான ரஷ்யாவின் நட்பு என்பது காலங்காலமாக நீடித்து வருகிறது. சுருக்கமாக சொல்வதெனில் ரஷ்யா நம் நீண்டகால நட்பு நாடு. எனவே இந்தியாவுக்கு எதிராக எத்தனை சதி வலைகளை பாகிஸ்தான் பின்னியிருந்தாலும், நிச்சயம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. எல்லாமே புஸ்வாணம் தான் என்கின்றனர் நிபுணர்கள். #IndiaVsPakistan #PutinIndiaVisit #Geopolitics #InternationalRelations #Diplomacy #WorldPolitics #IndiaPakistanRelations #Putin #NarendraModi #DonaldTrump #PoliticalDebate #ForeignPolicy #SouthAsia #GlobalDiplomacy #Tensions #VS #CurrentAffairs #PoliticalAnalysis

அக் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை