பஹல்காம் அட்டாக் மூளை சைஃபுல்லா செய்த பகீர் | india vs pakistan|pahalgam attack|Saifullah Kasuri
நாட்டையே உலுக்கிய காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி தகர்த்தது. இதை தொடர்ந்து போருக்கு வந்த பாகிஸ்தானையும், உரிய பதிலடி கொடுத்து 4 நாட்களில் புறமுதுகிட்டு ஓட செய்தது இந்தியா. இன்னும் பயங்கரவாதிகள் கொட்டமும், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தானின் ஆட்டமும் அடங்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் என்ற இடத்தில் பிஎம்எம்எல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பஹல்காம் அட்டாக்கின் மூளையும் இந்தியாவால் தேடப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியுமான சஃபிபுல்லா கசூரி சர்வ சாதாரணமாக பங்கேற்றான். அவனுடன் மும்பை அட்டாக் மாஸ்டர் மைன்டும் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவன தலைவனுமான ஹபீஸ் சயீத் மகன் தலஹா சயீத்தும் கலந்து கொண்டான். 2 பேருமே இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்கள். மேடையில் இருவரும் இந்தியாவுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். நம் நாட்டுக்கு எதிரான கோஷங்களையும் முழங்கினர்.