செத்த பொருளாதாரமா? டிரம்புக்கு மோடி சூடு india vs us trade war | modi vs trump | us tarrif on ind
அமெரிக்காவில் இறங்கும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு, உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டினார். இந்தியாவுக்கு எதிராக வன்மத்தையும் கொட்டினார். ‛ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் பரவாயில்லை. இரு நாட்டின் பொருளாதாரமும் செத்துவிட்டது. அதை அவர்கள் இன்னும் வலுவிழக்க செய்வார்கள் என்று சாடினார். டிரம்ப் போட்ட அடாவடி வரிக்கு இந்தியா அடிபணியாது என்று நம் பிரதமர் மோடி ஏற்கனவே மறைமுகமாக சொல்லி இருந்தார். நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் தான் முக்கியம். இதற்காக இந்தியா எந்த சமரசத்தையும் செய்யாது. தனிப்பட்ட முறையில் நான் இதற்கு பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் நான் தயாராக இருக்கிறேன் இந்தியாவும் தயார் என்று பதிலடி கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, செத்த பொருளாதாரம் என்று டிரம்ப் அடித்த கமென்ட்டுக்கும் இப்போது மோடி பதில் அளித்துள்ளார். பெங்களூரு 3ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக புகழ்ந்தார். உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக நம் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. சீர்திருத்தம், தீவிர செயல்திறன் மற்றும் நாம் செய்த மாற்றங்கள் தான் இதற்கு காரணம் என்று மோடி சொன்னார். 2014ல் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ வசதி இருந்தது. இப்போது 24 நகரங்களில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய மெட்ரோ திட்டத்தை கொண்ட 3வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 2014ல் 20,000 கிமீ நீள ரயில் பாதை இருந்தது. இப்போது அது 40,000 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. 74 ஏர்போர்ட் இருந்தது. இப்போது 160-ஐ தாண்டி விட்டது. 2014ல் 7 எய்ம்ஸ் மற்றும் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இப்போது 22 எய்ம்ஸ், 704 மருத்துவக்கல்லூரிகளாக அதிகரித்துள்ளன. 2014க்கு முன்பு இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ஆண்டுக்கு 40 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது 72 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். முன்பு செல்போன்களை இறக்குமதி செய்தோம். இப்போது செல்போன்களில் முதல் 5 ஏற்றுமதியாளர்களில் ஒருவராக இருக்கிறோம். 6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலக்டரானிக் ஐட்டங்களை ஏற்றுமதி செய்தோம். இப்போது 38 பில்லியன் அமெரிக்க டாலராக அந்த ஏற்றுமதி உயர்ந்து இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.