உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதவிக்கு சென்ற இந்திய விமானங்கள், கப்பல்கள் India rapid response| operation Brahma| byanmar earth qu

உதவிக்கு சென்ற இந்திய விமானங்கள், கப்பல்கள் India rapid response| operation Brahma| byanmar earth qu

இந்தியாவுடன் 1643 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடான மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. சில நொடிகள் பூமி குலுங்கியதில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். 1600க்கு மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, உடனடியாக உதவும் வகையில் ஆபரேஷன் பிரம்மா வை இந்தியா தொடங்கியது. முதற்கட்டமாக 15 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பப்பட்டது. அதில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான், சுகாதார பொருட்கள், சோலார் விளக்குகள், ஜெனரேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள் அனுப்பப்பட்டன. இவற்றை மியான்மரின் யாங்கோன் முதல்வர் யூ சோ தெய்னிடம் (U Soe Thein) இந்திய தூதர் அபய் தாக்குர் ஒப்படைத்தார். இதுதவிர நமது கடற்படையின் சத்புரா, சாவித்ரி கப்பல்கள் மூலம் 40 டன் நிவாரண பொருட்கள் யோங்கோனுக்கு (Yangon) அனுப்பப்பட்டு உள்ளன. இதுதவிர மேலும் 2 கப்பல்கள் அனுப்பப்பட உள்ளன. 80 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மியான்மருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கான்கிரீட் கட்டர், டிரில் மிஷின், சுத்தியல்கள், பிளாஸ்மா கட்டிங் மிஷின் உட்பட மீட்பு கருவிகளுடன் அக்குழு சென்றுள்ளது. 118 பேர் அடங்கிய மருத்துவ குழுவினரும் அனுப்பப்பட்டு உள்ளனர். முன்னதாக, மியான்மரின் தலைமை ஜெனரல் மின் ஆங் ஹிலேங்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை