ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு|Indian Armed Forces|Droupadi Murmu
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவம் கடந்த 7ம் தேதி அதிகாலை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. அதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து தரைவழி, வான்வழியாக மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதற்கு நமது முப்படைகள் இணைந்து தக்க பதிலடி கொடுத்தன. பாகிஸ்தான் ஏவிய 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள், நம் நாட்டு எல்லையை அடைவதற்கு முன்பே, துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. பஞ்சாபின் ஜலந்தரில் செயல்படும் ஆதம்பூர் விமான தளத்தில் இருந்து தான் பெரும்பாலான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான், சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.