சோதனை வெற்றி: பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு | Indian Army | Aatmanirbhar Bharat
நாடு முழுவதும் தற்கொலைப்படை ட்ரோன்கள், மின்னணு போர் கருவிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. போக்ரான் மற்றும் பாபினா பகுதியில் உள்ள துப்பாக்கி சூடு தளங்கள், ஜோஷிமத் உட்பட முக்கிய இடங்களில் போர் பயிற்சி சோதனைகள் நடத்தப்பட்டது. ஆளில்லா வான்வழி அமைப்புகள் , துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், தற்கொலைப்படை ட்ரோன்கள், ஆயுத விநியோக அமைப்புகள், ஒருங்கிணைந்த ட்ரோன் இடைமறிப்பு அமைப்பு, இலகுரக ரேடார்கள், இதர மின்னணு போர்க்கருவிகள் சோதிக்கப்பட்டது. இதே போல ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு உபகரண சேதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.