உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அறிவிப்பு | Indian Army Chief | Additional Power Army

ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அறிவிப்பு | Indian Army Chief | Additional Power Army

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்திய எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் தாக்குதல், இந்தியாவின் பதிலடி உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முப்படை அதிகாரிகள் விளக்கினர். அடுத்தகட்ட நகர்வு குறித்து முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதிக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்துக்கு பணியாளர்களை சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை உடனடியாக போர் களத்துக்கு அழைக்கும் பணியை ராணுவ தளபதி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை