உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் இறங்கும் வரை கண்காணித்த விமானப்படை Indian Rafale Aircrafts Escorts the Helicopter

இந்தியாவில் இறங்கும் வரை கண்காணித்த விமானப்படை Indian Rafale Aircrafts Escorts the Helicopter

வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்ததை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா, ஆகஸ்ட் 5ம் தேதி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவசர அவசரமாக வங்க தேசத்தில் இருந்து தப்பினார். அவர், முதலில் இந்தியாவிற்கும் பின் இங்கிருந்து பிரிட்டனுக்கும் செல்வார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 5ம் தேதி மதியம் 3 மணி அளவில் வங்கதேசத்தில் இருந்து இந்திய வான் எல்லைக்குள் ஹசீனா வந்த ஹெலிகாப்டர் நுழைந்தது. அதில் வருவது ஷேக் ஹசீனா தான் என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹசீனாவின் ஹெலிகாப்டர் மேற்கு வங்கத்தில் நுழைந்ததும், வான்வெளியில் தயார் நிலையில் இருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 ரபேல் போர் விமானங்கள் ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக இருபுறமும் பறந்து வந்தன. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களை கடந்து ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் அன்று மாலை 5.45க்கு டில்லியில் தரையிறங்கியது. அதுவரை ரபேல் விமானங்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ