/ தினமலர் டிவி
/ பொது
/ 62 ஆயிரம் கோடியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய டீல் | 97 Tejas Mark-1A jets |
62 ஆயிரம் கோடியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய டீல் | 97 Tejas Mark-1A jets |
இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்கள் நாளை ஓய்வு பெற உள்ளன. இதற்கு பதிலாக தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. புதிய விமானங்களை நம் படையில் சேர்க்கும் வகையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு துறை இன்று முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. 62,370 கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜஸ் போர் விமானங்கள் கிடைக்க உள்ளன.
செப் 25, 2025