இந்தியா விட்ட அடி! சொந்த நாட்டை கிழித்த பாக் நடிகை ind vs pak | indus waters treaty | hina bayat
1998 மே 28ம் தேதி பாகிஸ்தான் நடத்திய அணு ஆயுத சோதனை வெற்றி பெற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதியை பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது. போரில் இந்தியாவிடம் அடிவாங்கிய பிறகும் கூட, பெருமை பீற்றி இந்த நாளை பாகிஸ்தான் கொண்டாடியது. அதே நாளில் கராச்சி ஏர்போர்ட் வந்த பாகிஸ்தானின் பிரபல நடிகை ஹினா கவாஜா பயாத், அங்கு கழிவறையில் கூட தண்ணீர் இல்லாததை கண்டு அதிர்ந்து போனார். ‛இப்படியொரு நிலைமையில் அணு ஆயுத சோதனையை நினைத்து கொண்டாடுவது தேவைதானா என்று அரசை அவர் வசைபாடினார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாவில் நடிகை ஹினா கவாஜா வெளியிட்ட வீடியோவில் கூறியது: இந்த நாளில் நாட்டை நினைத்து நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் நான் இப்போது நிற்கும் கராச்சி ஏர்போர்ட்டில் தண்ணீர் இல்லை. இத்தனைக்கும் இது இன்டர்நேஷனல் ஏர்போர்ட். மக்கள் நமாஸ் செய்ய தண்ணீர் இல்லை. குழந்தைகள் பாத்ரூம் போக கூட தண்ணீர் இல்லை. இது வெட்கக்கேடானது.