உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகமே பார்க்க பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா india vs pakistan un assembly| pahalgam | op sindoor

உலகமே பார்க்க பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா india vs pakistan un assembly| pahalgam | op sindoor

அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்தனர். பின்னர் நியூயார்க் நகரில் நடக்கும் ஐநா பொது சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பாகிஸ்தான் பிரதமருக்கு அதே பொது சபையில் இந்தியா மரண அடி கொடுத்தது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் வழக்கம் போல் முதலில் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தார். ‛காஷ்மீர் மக்களுக்கு நானும் பாகிஸ்தானும் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை முதலில் உறுதி அளிக்கிறேன். காஷ்மீரில் நடக்கும் இந்தியாவின் கொடுங்கோன்மை விரைவில் நிறுத்தப்படும். ஐக்கிய நாடுகள் சபையில் பாரபட்சமற்ற முறையில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் சுயமாக முடிவெடுப்பதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்தது. பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு இது பெரும் அடியாக விழுந்தது. இது பற்றி பேசிய ஷெபாஷ் ஷெரீப், ‛சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் சர்வேதேச சட்டத்தை இந்தியா மீறி விட்டது. இந்த நடவடிக்கை போரை தூண்டும் செயல் என்றார். பயங்கரவாதம் பற்றி பேசிய அவர், தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் போன்ற வெளிநாட்டு ஆதரவு குழுக்கள் பாகிஸ்தானை குறி வைக்கின்றன. அனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் என்று பேசினார்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை