உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூரில் பைக்கில் சிறகடித்த காதல் ஜோடியின் சேட்டை | Insta reels | Police Fine

திருப்பூரில் பைக்கில் சிறகடித்த காதல் ஜோடியின் சேட்டை | Insta reels | Police Fine

திருப்பூர் அவிநாசியை சேர்ந்த இளைஞரும், பழங்கரையை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். காதல் ஜோடிகள் பைக்கில் ஊர் சுற்றி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். பல முறை போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளில் முகம் சுளிக்கும் வகையில் சில்மிஷம் செய்துள்ளனர். சமீபத்தில் அவிநாசி பழங்கரை பைபாஸ் அருகே காதல் ஜோடி எடுத்த வீடியோ சர்ச்சையானது. பைக்கை காதலி ஓட்ட இளைஞர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துள்ளனர். இருவரும் கன்னத்தை கிள்ளிக்கொண்டே பைக்கில் செல்வது வீடியோவில் இருந்தது. பைக் நம்பர் பிளேட் தெளிவாக தெரிந்தது. அதனை வைத்து ஆர்வலர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை