உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடைக்கால அரசுக்கு தலைமை சுசிலா: தேர்வு செய்த நேபாள இளைஞர்கள் Sushila kark

இடைக்கால அரசுக்கு தலைமை சுசிலா: தேர்வு செய்த நேபாள இளைஞர்கள் Sushila kark

நேபாளத்தில் இரண்டு நாளாக அரசுக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பார்லிமென்ட் கட்டடம், பிரதமர் சர்மா ஒலி வீடு, முன்னாள் பிரதமர் வீடு, சுப்ரீம் கோர்ட் முதலானவை தீ வைத்து எரிக்கப்பட்டன. நிதி அமைச்சர் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகாரை தீயில் கருகி இறந்த சம்பவமும் நடந்தது. நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல், பிரதமர் சர்மா ஒலி, அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்து நாடு முழுவதும் அமைதியை நிலைநாட்டி வருகிறது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் தொடங்கினாலும், நேபாள அரசின் ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறியதால், எதிர்பார்க்காத சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமரும், அதிபரும் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறி வருகின்றனர். போராட்டத்தை ஒருங்கிணைத்த காத்மாண்டு மேயர் பாலேன் ஷா அல்லது சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்து அவர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வழியாக நடைபெற்ற ஆலோசனையில் சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தெரிகிறது. இதில் பாலேன் ஷாவை விட சுகிலா கார்கியை பெரும்பாலானவர்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் விரும்பினால், இடைக்கால அரசை வழி நடத்த தயார் என 73 வயதான சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியும் சம்மதம் தெரிவித்துள்ளார். மோதல் தொடங்கியதில் இருந்து நான் தூங்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. எது நடந்திருந்தாலும் அது மனதை வலிக்கச் செய்கிறது என்று சுசிலா கார்க்கி தெரிவித்துள்ளார். #SushilaKarki #FormerChiefJustice #InterimGovtNepal #NepalPolitics #JusticeSystem #LegalReforms #FemaleLeadership #WomenInLaw #DemocracyInNepal #JudicialIndependence #RuleOfLaw #NepalJudiciary

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை