உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் உச்ச கட்டம்: குவைத் மீது ஈரான் குண்டு மழை

அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் உச்ச கட்டம்: குவைத் மீது ஈரான் குண்டு மழை

#IranattackonKuwait #Iranwar #Isrealwar #IranUSAwar ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் முக்கிய இடங்களில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானின் அருகில் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறருது. தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், குவைத், பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத்தில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன. அது தவிர, அங்குள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களும் குறி வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹ்ரைன் மற்றும் எகிப்து மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது. இவற்றை அந்தந்தந்த நாடுகள் உறுதிப்படுத்தி உள்ளன. குவைத் மீது பறந்த பல ஈரான் ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக குவைத் அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. எகிப்தும் தங்கள் நாட்டின் மீதான ஈரானிய தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. ஈரான் - அமெரிக்கா போரால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. சில நாட்களாக ஓய்ந்திருந்த சண்டை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது சர்வதேச நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை