உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்து மூலம் டில்லி திரும்பும் 1,000 இந்தியர்கள் | Israel - Iran conflicts | Iran opens airs

ஆபரேஷன் சிந்து மூலம் டில்லி திரும்பும் 1,000 இந்தியர்கள் | Israel - Iran conflicts | Iran opens airs

ஈரான் - இஸ்ரேல் நாடுகள் இடையே நடக்கும் போர் ஒரு வாரத்தை கடந்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்போதுள்ள சூழலில் இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய ராணுவ கட்டமைப்புகள், அணு ஆயுத கூடங்கள், எண்ணெய் கிணறு மற்றும் சுத்திகரிப்பு ஆலை, இயற்கை எரிவாயு ஆலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியது. இதனால் ஈரானுக்கு மிகப்பெரிய அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் அப்படித்தான். இஸ்ரேல் தரப்பில் 24 பேரும், ஈரான் தரப்பில் 639 பேர் இறந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. நாளுக்கு நாள் சண்டை தீவிரமாகி வருவதால் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தெஹ்ரானில் இருந்த 110 இந்திய மாணவர்கள் தூதரகம் மூலம் அர்மீனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை டில்லி வந்தடைந்தனர். தீவிரமான போரால் மத்திய கிழக்கில் பதட்டம் நிலவும் சூழலில், இந்தியர்கள் வெளியேறுவதற்காக ஈரான் தனது வான் எல்லையை திறந்துள்ளது. இதனால் அடுத்தகட்டமாக ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் சுமார் 1000 இந்தியர்களை அழதை்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஈரானின் பிரபலமான நகரமான மஷாத்தில் இருந்து மஹான் ஏர் சார்ட்ர்ட் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் விமானம் இன்று இரவு டில்லி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி