ஈரான் vs அமெரிக்கா+இஸ்ரேல்: உலகமே நடுங்குவது ஏன்? Iran vs US Israel | Trump vs khamenei | Iran war
ஈரான் ஒரு அணு ஆயுதத்தை கூட தயாரித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கும், தங்களது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலுக்கும் ஆபத்து என்று அவர் கருதுகிறார். எதற்கெடுத்தாலும் ஈரானை மிரட்டி வந்த டிரம்ப், கடந்த வாரம் திடீரென பரபரப்பான ஒரு ஆஃபரை கொடுத்தார். ‛ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய வர வேண்டும். இல்லை என்றால் எங்களின ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் ஈரான் கொஞ்சம் கூட அடிபணியவில்லை. ‛உங்கிக்கிட்ட பேச்சு வார்த்தைக்குலாம் வரமுடியாது; என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க என்று இப்போது அதிரடி காட்டி இருக்கிறது ஈரான். டிரம்பின் கோபம் உச்சிக்கு போய்விட்டது. அவருக்கு இப்போது இருக்கும் ஒரே ஆப்சன் போர் தான். சொன்னது போல் ஈரான் மீது போர் தொடுக்க போகிறாரா டிரம்ப்? ஈரான்-அமெரிக்கா இப்படி பகிரங்கமாக மோதி கொள்ள என்ன காரணம்? ஈரான் அணு உற்பத்தி கூடத்தை தாக்க இஸ்ரேலும் தீவிர முயற்சி எடுப்பது ஏன்? அணு ஆயுதம் தயாரித்தே ஆவோம் என்று ஈரான் முரண்டு பிடிப்பதன் பின்னணி என்ன? உண்மையிலேயே அமெரிக்கா-ஈரான் இடையே போர் வெடிக்கப்போகிறதா? போர் வந்தால் யார் பக்கம் வெற்றி என்பதை பார்க்கலாம். அரை நூற்றாண்டுக்கு முன்பு ஐநா கண்காணிப்பில் அணு ஆயுத பரவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் கையெழுத்து போட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நாடுகள், அணு ஆயுதம் தயாரிக்கவோ, ஏற்கனவே இருக்கும் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தவோ, இன்னொரு நாடுகளுக்கு கொடுக்கவோ அனுமதி கிடையாது.