உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சினிமா, அரசியல் பிரபலங்கள் திரண்ட திருமண விழா | Ishari Ganesh daughter wedding | Cinema acters | Pol

சினிமா, அரசியல் பிரபலங்கள் திரண்ட திருமண விழா | Ishari Ganesh daughter wedding | Cinema acters | Pol

வேல்ஸ் பல்கலை நிறுவனரும் சினிமா பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் மகள் திருமணம் சென்னை இ சி ஆர் சாலை நீலாங்கரை தனியார் கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்கள் ப்ரீத்தா கணேஷ் - லூஷ்வின் குமார் தம்பதியை வாழ்த்தினர். சமீபத்தில் லீலா பேலஸில் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், திருமணத்தில் சினிமா பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். எப்போதும் போல நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக கதர் சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார். நடிகர் கமலஹாசன் வெள்ளை நிற குர்தா, கூலர்ஸ் அணிந்து கொண்டு கலக்கலாக வந்தார். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அமைச்சர் சேகர் பாபுவுடன் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்னர். இயக்குநர்கள் சுந்தர். சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பாக்யராஜ், பி. வாசு உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்தினர். நடிகர்கள் சத்யராஜ், பிரபு, கார்த்திக், பிரசாந்த், ரவி மோகன், பாடகி கெனிஷா, அதிதி ஷங்கர், பிரியா ஆனந்த் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை