மரணஅடி! ஹிஸ்புல்லாவின் அடிநாதமே அவுட்? | Israel | Israel-Hezbollah conflict
முடிச்சுவுட்டாங்க.. இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை உச்சகட்ட அதிர்ச்சியில் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான தாக்குதல தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5000 வாக்கி டாக்கி, பேஜர்கள் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் வடக்கு நகரங்கள் மீது 10 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்து எல்லை தாண்டி வந்தும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் ராமட் டேவிட் விமான படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பதிலுக்கு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இருந்தும் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து தாக்குதல் ஓயவில்லை. அடுத்த அதிரடியை காட்ட முடிவெடுத்த இஸ்ரேல் லெபனான் மக்களுக்கு அவசர மெசேஜ் அனுப்பியது.