உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் மீது குண்டு வீசி கொண்டாடிய ஹமாஸ் | Israel vs Hamas | October 7 attack on Israel | IDF

இஸ்ரேல் மீது குண்டு வீசி கொண்டாடிய ஹமாஸ் | Israel vs Hamas | October 7 attack on Israel | IDF

இஸ்ரேலை மிரள விட்ட குண்டுகள் அதே நாளில் ஹமாஸ் அட்டூழியம் விடியலே திக் திக் இதே அக்டோபர் 7ம் தேதி தான் இஸ்ரேல், ஹமாஸ் போர் வெடித்தது. அன்று காசாவில் இருந்து ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் தெற்கு இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். சரமாரியாக ஏவுகணை, ராக்கெட் குண்டுகளையும் வீசினர். ஒரே நாளில் இஸ்ரேலில் 1200 பேர் செத்து மடிந்தனர். இஸ்ரேலியர்கள் பலரை பணையக்கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். அதன் பிறகு தான் ஹமாசுக்கு எதிரான மிகப்பெரிய போரை இஸ்ரேல் துவங்கியது. இதுவரை காசாவில் 42 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் இன்று முதலாம் ஆண்டு நினைவு நாளை இஸ்ரேல் அனுசரித்தது. தெற்கு இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். ஹமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்து சென்ற பலரை கொடூரமான முறையில் கொன்று விட்டனர். இன்னும் 101 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் முன்பு இன்று உறவினர்கள் ஊர்வலம் சென்றனர். இன்னொரு பக்கம் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் முதலாம் ஆண்டு வெற்றி நாளை கொண்டாடினர். தாங்கள் நடத்திய கொடூர தாக்குதலை நினைவுகூரும் விதமாக அதே நாளான இன்று காலையில் சக்திவாய்ந்த ராக்கெட் குண்டுகளை இஸ்ரேல் மீது போட்டனர். காலை ஆறரை மணிக்கு தெற்கு இஸ்ரேலில் 4 ராக்கெட் குண்டுகளை வீசினர். அதில் 3 குண்டுகளை இஸ்ரேலின் அயன்டோம் வானிலே இடைமறித்து அழித்தது. ஒரு குண்டு திறந்த வெளியில் விழுந்த வெடித்தது. இந்த தாக்குதலில் இருக்கும் காயம் இல்லை. சில மணி நேரங்களில் டெல் அவிவ் மற்றும் புறநகர் பகுதிகளில் எச்சரிக்கை சைரன் ஒலித்தது. நெரிசல் நிறைந்த மெட்ரோ ரெயில் நிலையத்தை குறி வைத்து 5 ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் வீசியது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ