இதோடு ஹிஸ்புல்லா குளோஸ்? இஸ்ரேல் மிகப்பெரிய செய்கை | Israel vs Hizbollah | who is Ibrahim Qubaisi
ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி இப்ராகிம் குபைசி Ibrahim Qubaisi. இவர் தான் ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவின் தளபதியாக இருந்தார். பொதுவாக இரு நாடுகளுக்கு இடையேயான சண்டையில் ராக்கெட் மற்றும் ஏவுகணைக குண்டுகளின் பங்கு தான் மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட முக்கிய பிரிவின் தளபதியாக இருந்த இப்ராகிம் குபைசியை தான் கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அவருடன் இறந்த மற்ற நபர்களும் ஹிஸ்புல்லாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் என்று இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இப்போது கொல்லப்பட்டு இருக்கும் இப்ராகிம் குபைசி, 1980களில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். ஹிஸ்புல்லா படையில் பல முக்கிய பொறுப்புகளை அடுத்தடுத்து வகித்தார். ஹிஸ்புல்லா உயர் ராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. ராக்கெட் குண்டு மற்றும் ஏவுகணைகள் வீசுவதில் நுட்பமான அறிவும், தெளிவும் பெற்று இருந்தார் இப்ராகிம் குபைசி. அதனால் தான் அந்த பிரிவுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டார்.