உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முக்கிய தளபதியை இஸ்ரேல் போட்டு தள்ளும் பகீர் காட்சி | israel vs iran | hezbollah | idf viral video

முக்கிய தளபதியை இஸ்ரேல் போட்டு தள்ளும் பகீர் காட்சி | israel vs iran | hezbollah | idf viral video

ஈரானிலும் காசாவிலும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இரு இடங்களிலும் சண்டை உச்சக்கட்டத்தில் நடக்கிறது. இந்த நிலையில் திடீரென லெபனானில் உள்ள ஹெஸ்புலாவின் முக்கிய தளபதியை இஸ்ரேல் ராணுவம் இப்போது குண்டு வீசி கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லெபனானின் லிட்டானியா ஏரியாவின் ஹெஸ்புலா தளபதியாக இருந்தவன் முகமது காதர் அல் ஹூசைனி Mohammed Khader Al Husseini. இவனை ஷப்ரிஹா என்ற இடத்தில் வைத்து இஸ்ரேல் குண்டு வீசி கொன்று இருக்கிறது. அங்குள்ள பிரதான ரோடு ஒன்றில் முகமது காதர் காரில் சென்று கொண்டிருந்தான். மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த காரில் இஸ்ரேல் ஏவிய ட்ரோன் துல்லியமாக குண்டு வீசி தாக்கியது. சம்பவ இடத்திலேயே ஹெஸ்புலா தளபதி இறந்தான். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இஸ்ரேல் ராணுவம் அதிர வைத்துள்ளது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ