உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லெபனானில் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை israel vs iran|hezbollah| idf attack video

லெபனானில் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை israel vs iran|hezbollah| idf attack video

ஈரான், இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இன்று லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு லெபனானில் பியூஃபோர்ட் கேஸ்டில் என்ற இடத்தில் ஹெஸ்புலா பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அங்கு மீண்டும் ராணுவ கட்டமைப்புகளை ஹெஸ்புலா பயங்கரவாதிகள் பலப்படுத்த முயன்றதால் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் கூறியது. இந்த குண்டு வீச்சில் ஒருவர் இறந்தார். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறி விட்டதாகவும், அப்பார்ட்மென்ட்டில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை குறி வைத்ததாகவும் லெபனான் அரசாங்கம் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு லெபனானில் மீண்டும் கட்டமைப்புகளை பலப்படுத்தும் வேலையை ஹெஸ்புலா செய்து வருகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் ராக்கெட் குண்டுகளை ஏவும் வசதி, சேமிக்கும் வசதியை ஹெஸ்புலா மேம்படுத்தியதை உறுதி செய்தோம். அதை அழிக்கவே தாக்குதல் நடத்தினோம்.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி