உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிர்ப்புகளை மீறி காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல் israel pm benjamin Netanyahu

எதிர்ப்புகளை மீறி காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல் israel pm benjamin Netanyahu

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒன்றரை ஆண்டுகளாக போர் நீடிக்கிறது. 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்து, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதே போர் மூள்வதற்கு முக்கிய காரணம். அமெரிக்கா, எகிப்து கத்தார் நாடுகளின் முன்னிலையில், 6 வாரங்களுக்கு போரை நிறுத்த கடந்த ஜனவரியில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின், போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக பிணை கைதிகளை விடுவிக்காவிடடால் தாக்குவோம் என எச்சரித்து இருந்தது. இச்சூழலில் காஸா மீதான போரை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் காஸாவில் 90க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறும்போது, காஸாவிடம் போரிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினர் அழிக்கப்பட்டு, பிணை கைதிகள் அனைவரையும் மீட்கும் வரை போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது. அப்படி போரிட்டால்தான் இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது; போரை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை