/ தினமலர் டிவி
/ பொது
/ சாட்லைட் போட்டோ ஆதாரம்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு குபீர் | Israel | Iran | Nuclear Mission
சாட்லைட் போட்டோ ஆதாரம்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு குபீர் | Israel | Iran | Nuclear Mission
ஆட்டம் இன்னும் முடியவில்லை ஈரான் வெளியிட்ட பகீர் தகவல் 16 டிரக்குகளில் இருந்தது என்ன? அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த இரண்டு வாரமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஜூன் 22ம் தேதி அந்நாட்டின் முதன்மையான மூன்று அணுசக்தி நிலையங்களான போர்டோவ், நடான்ஸ், மற்றும் இஷாஹன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. போர்டோவ் அணுசக்தி நிலையத்தை அழிப்பதே தாக்குதலின் நோக்கம். மற்ற நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். தாக்குதலில், போர்டோவ் அணுசக்தி நிலையத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என நம்புகிறோம் என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறினார்.
ஜூன் 25, 2025