உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாசுக்கு திடீர் முத்தம்: இஸ்ரேல் கொடுத்த பதிலடி | hostage who kissed Hamas men | Israel vs Hamas

ஹமாசுக்கு திடீர் முத்தம்: இஸ்ரேல் கொடுத்த பதிலடி | hostage who kissed Hamas men | Israel vs Hamas

காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடந்து வந்த தீவிர போர் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி பிடித்து சென்ற பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீன் நாட்டு கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை 6 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முன்வந்தது. பதிலுக்கு 620 பாலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். வழக்கம் போல் மேடை ஏற்றி 6 பிணை கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தது. இதை பார்க்க நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடி இருந்தனர். ஓமர் ஷெம் டோவ் என்ற பிணைக்கைதி மேடையில் நின்ற போது, முகத்தை மூடி நின்ற ஹமாஸ் பயங்கரவாதி ஒருத்தனுக்கு திடீரென முத்தம் கொடுத்தார்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ