/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய பெருங்கடலில் நிற்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல் | Iran vs US war | Donald Trump
இந்திய பெருங்கடலில் நிற்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல் | Iran vs US war | Donald Trump
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது போர் தொடுத்தன. மூன்று வாரத்தை கடந்த பின்னும் போர் நிற்பதுபோல தெரியவில்லை. நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. போரின் தொடக்கத்திலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தளங்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே தங்கள் கடல் எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அந்த வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
மார் 20, 2026