ஹமாஸ் புதிய தலைவனை தீர்த்துக்கட்டியது இஸ்ரேல் israel vs hamas | mohammad sinwar | idf | netanyahu
ஹமாசின் 4வது தலைவனும் காலி கதை முடித்தது இஸ்ரேல் ராணுவம் யார் இந்த முகமது சின்வார்? டிஸ்க்: காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. டிரம்ப் அதிபரானதும் அமலுக்கு வந்த போர் நிறுத்தம் இரண்டே மாதம் கூட நீடிக்கவில்லை. ஒரே நேரத்தில் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் மறுத்ததால், மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். முன்பு நடந்ததை விட இந்த முறை தீவிரமாக காசாவை தாக்கி வருகிறது. ஏற்கனவே நடந்த தாக்குதலில் காசா உருக்குலைந்து விட்டது. மிச்சம் மீதி இருக்கும் கட்டுமானங்களும் இப்போது தகர்க்கப்படுகின்றன. மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்கத்துடன் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. காசாவில் இன்று ஒரே நாளில் 39 பேர் கொல்லப்பட்டனர். கடைசி 10 நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதுவரை காசாவில் நேர்ந்த பலி 54 ஆயிரத்தை தொட்டு விட்டது. இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் புதிய தலைவனாக பொறுப்பேற்ற முகமது சின்வாரை போட்டுத்தள்ளி விட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். ‛காசா போரில் பல ஆயிரம் பயங்கரவாதிகளை அழித்து விட்டோம். முக்கியமாக, ஹமாஸ் தலைவர்களாக இருந்த டெய்ஃப், ஹனியே, யாஹ்யா சின்வார் கதையை முடித்தோம். இப்போது புதிய தலைவன் முகமது சின்வாரும் எங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்கிறான் என்று நினைக்கிறோம் என நெதன்யாகு சொன்னார். ஹமாசுக்கு எதிரான போர் 2023 அக்டோபரில் வெடித்தது. அதன் பிறகு பதவிக்கு வந்த எல்லா ஹமாஸ் தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று விட்டது. 22 ஆண்டுகள் ராணுவ தலைவனாக இருந்த முகமது டெய்ஃபை 2024 ஜூலையில் குண்டு வீசி கொன்றது.